பிரான்ஸில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதில் 12 மாவட்டங்களைச் சேந்த பாடசாலை மற்றும் கல்லூரிகள் உள்ளடங்குகின்றன.
ஜூன் 17, இன்று வெள்ளிக்கிழமை வெப்பம் காரணமாக பிரான்ஸிலுள்ள Tarn, Haute-Garonne, Gers, Tarn-et-Garonne, Lot-et-Garonne, Landes, Gironde, Charente, Charente-Maritime, Deux-Sèvres, Vienne மற்றும் Vendée ஆகிய 12 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
குறித்த மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்கள் இன்று பாடசாலைக்கோ அல்லது கல்லூரிக்கோ சமூகமளிப்பது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாடசாலைகள் அல்லது கல்லூரிகள் இயங்கும் எனவும், பெற்றோர்கள் விரும்பினால் பிள்ளைகளை அனுப்பி வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.