15 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸின் Sevran (Seine-Saint-Denis) நகரில் புதன்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் நபர் ஒருவர், அதே குடியிருப்பின் 15 ஆவது தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நள்ளிரவு 12.45 மணி அளவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
ஆனால் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தை வந்தடையும் முன்னரே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ள நிலையில் முதல்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் பலியானவரின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது கொலையா அல்லது தற்கொலை என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.