ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிரிக்கும் திட்டத்தை மக்ரோன் உறுதி செய்துள்ளார்.
மக்ரோன் இது தொடர்பாக தெரிவிக்கையில், “நாங்கள் நீண்ட காலம் வாழுகிறோம். அது ஒரு நல்ல விடயம். இதனால் நாங்கள் உழைக்கும் காலத்தையும் அதிகரிக்க வேண்டும். இதனால் 62 வயதில் இருந்து 65 வயதாக ஓய்வு பெறும் காலத்தை உயர்த்த வேண்டும்.” என மக்ரோன் தெரிவித்தார்.
மேலும், “அதேவேளை, ஓய்வூதிய தொகையையும் குறைந்தது €1,100 யூரோக்களுக்கு குறையாமல் வழங்கவும் ஆலோசித்து வருகிறோம்!” எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தொலைக்காட்சி நேர்காணலில் இதனை அவர் தெரிவித்திருந்தார்.