ரஷ்யாவில் இருந்து பிரான்சுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் எரிவாயு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூன் 15 ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாக பிரான்சுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் GRTgaz நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் தனது எரிவாயு கொள்வனவில் 17% வீதமானவற்றை இரஷ்யாவில் இருந்து பெறுகிறது. ஜெர்மனி வழியாக எரிவாயு குழாய் ஊடாக பிரான்சுக்கு இந்த எரிவாயு வருகிறது.
இவ்வருட ஆரம்பத்தில் இந்த குழாய் மூலமான விநியோகம் கணிசமாக குறைவடைந்திருந்த நிலையில், தற்போது முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை, இந்த தடைக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பிரான்சுக்கான எரிவாயு பிரதானமாக ஸ்பெயினில் இருந்தே வருகிறது. இந்நிலையில், ஸ்பெயினில் இருந்து பெறும் எரிவாயுவின் கொள்முதலை பிரான்ஸ் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது