கொரோனாத் தொற்றினால் சாவடைபவர்களின் எண்ணிக்கை மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது.
மீண்டும் கடந்த 24 மணிநேரத்தில் அதிர்ச்சிதரும் வகையில் 285 பேர் சாவடைந்துள்ளனர். இதனுடன் பிரான்சில் மொத்தமாக 137.276 பேர் கொரோனாவினால் சாவடைந்துள்ளனர்.
109.240 பேர் வைத்தியசாலைகளிலும், 28.036 பேர் சமூக மற்றும் முதியோர் இல்லங்களில் சாவடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் 97.382 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
மருத்துவமனைகளில் 27.566 பேர் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.842 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அளவிலான தொற்று விகிதமானது, திடீரென பெரும் உச்சமடைந்து 100.000 பேரிற்கு 50 இனைத் தாண்டினாலே பெரும் எச்சரிக்கை நிலை எனும் நி
லையில், 100.000 பேரிற்கு 845 என்ற விகிதத்தில் உள்ளது.
வைத்தியசாலைகளின் அழுத்தம் 36.2 சதவீதமாக உள்ளது.