உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அந்நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப்பார்த்தார்.
குறிப்பாக தலைநகர் கீவிற்கு (Kiev) அருகே உள்ள புறநகரான Irpin எனும் நகருக்கு விஜயம் மேற்கொண்டார். குறித்த நகரம் மிக இரஷ்ய படையின் தாக்குதலால் மிக மோசமாக சேதமடைந்துள்ளது. கிட்டத்தட்ட 80% வீதமான கட்டிடங்கள் உடைந்து நொருங்கியுள்ளது.
குறித்த நகரை பார்வையிட்ட மக்ரோன், உயிரிழந்த உக்ரைன் நாட்டு வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.
இதன் முடியில், ‘இந்த போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என நான் விரும்புகிறேன்!’ என தெரிவித்தார்.
மக்ரோனுடன் உக்ரைனுக்கு பயணித்திருந்த இத்தாலியின் பிரதமர் மற்றும் ஜெர்மனியின் தலைவரும் மேற்படி இடங்களைப் பார்வையிட்டிருந்தனர்.