நேற்று செவ்வாய்க்கிழமை Roissy-Charles-De-Gaulle விமான நிலையத்தில் பெரும் விமான விபத்து ஒன்று நிகழ இருந்த நிலையில், இறுதி நொடியில் இவ்விபத்து தவிர்க்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து புறப்பட்ட Boeing 777 விமானம் ஒன்று, நேற்று செவ்வாய்க்கிழமை காலை பரிசின் Charles-De-Gaulle விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுப்பப்பட்ட சமிக்ஞைகள் எதற்கும் விமானத்தில் இருந்து பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 1200 அடி உயரத்துக்கு (370 மீற்றர் உயரம்) விமானம் பதிந்து, தரையிறங்குவதற்கு தயாரானபோதும் எவ்வித சமிக்ஞைகளுக்கும் விமான தரப்பில் இருந்து பதிலளிக்கவில்லை.
விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து பல தடவைகள் சமிக்ஞைகள் கொடுக்கப்பட்டும் பதில் எதுவும் அங்கிருந்து கிடைக்கவில்லை.
பின்னர் விமானி குறித்த விமானத்தை ஒரு வழியாக சமாளித்து தரையிறக்கியுள்ளார்.
அவ் விமானத்துக்கு அடுத்ததாக மற்றுமொரு விமானம் 1500 அடி உயரத்தில் அடுத்த சில நொடிகளில் தரையிறங்க தயாராக இருந்துள்ளது. இந்நிலையில் மேற்படி விமானம் சமிக்ஞை எதுவும் அளிக்கவில்லை என்பதால், பெரும் விபத்து ஒன்று நிகழ இருந்தது. இவ்விரு விமானங்களும் மோதுண்டு, பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விமானி ஒருவழியாக சமாளித்துக்கொண்டு விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
விமானத்தின் விமானி பதிலேதும் அளிக்காதது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிவில் விமான சேவைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விசாரணை அமைப்பு இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது