காவல்துறையினருக்கு அழைப்பெடுத்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தந்தை போதைப்பொருள் வைத்துள்ளார் என தகவல் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் Angers (Maine-et-Loire) நகரில் இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்ற போதும், அது குறித்த செய்தியினை அதிகாரிகள் இன்று புதன்கிழமையே வெளியிட்டுள்ளனர். இங்கு வசிக்கும் 41 வயதுடைய ஒருவர், அன்றைய தினம் பணி முடிந்து தனது வீட்டுக்கு திரும்பியபோது, அவருக்காக வீட்டில் காவல்துறையினர் காத்திருந்துள்ளனர். அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த 31 கிலோ எடையுள்ள கஞ்சா பொதியை மீட்ட அவர்கள், அதை வைத்திருந்த குற்றத்துக்காக குறித்த குடும்பத்தலைவரை கைது செய்யவே காத்திருந்துள்ளனர்.

அவரின் 13 வயது மகள் ஒருவரே காவல்துறையினரை அழைத்துள்ளார். விசாரணைகளில் போதைப்பொருள் குறித்த எந்த விபரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டனர். அவருக்கு 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.