ஈஃபிள் கோபுரத்தின் வரவேற்பு பகுதியை புனரமைக்கும் திட்டத்தினை பரிஸ் நகரசபை கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியினை கருத்தில் கொண்டு, ஈஃபிள் கோபுரத்தின் வரவேற்பு பகுதியை நவீன முறையில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதற்கான அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

அவர் இது தொடர்பாக அறிவித்ததில் இருந்து எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் எழுந்தன. மேற்படி திட்டமானது இயற்கை வளத்தை சிதைக்கும் திட்டம் என இயற்கை பாதுகாவல்கள் குரல் எழுப்பினர். இத்திட்டத்துக்கு எதிரான பரிஸ் முழுவதும் கையெழுத்துடன் கூடிய மணு சேகரிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்படி திட்டத்தினை கை விடுவதாக பரிஸ் நகர துணை முதல்வர் Emmanuel Gregoire அறிவித்துள்ளார்.

**
நகரசபை திட்டமிட்டிருந்த திருத்தப்பணிகளுக்காக நூற்றாண்டு கால மரங்கள் பலவற்றை வெட்டவேண்டிய தேவை எழுந்ததை அடுத்தே இந்த சர்ச்சைகள் வெடித்திருந்தது.