அண்மையில் Livret A சேமிப்பு கணக்கின் வட்டி வீதம் அதிகரித்ததை அடுத்து, தற்போது மீண்டும் வட்டி வீதம் அதிகரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி (2022) முதன் முறையாக 0.5% வீததால் வட்டி அதிகரித்து, மொத்த வட்டி 1% வீதமாக உயர்வடைந்திருந்தது. அதன் பின்னர் தற்போது மீண்டும் 0.25% வீதத்தால் வட்டி அதிகரிக்க உள்ளதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. இரஷ்யா-உக்ரைன் யுத்தத்தை அடுத்து, சர்வதே நாடுகள் முழுவதும் பணவீக்கத்தைத் சந்தித்துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே இந்த வட்டி வீதம் அதிகரிப்புக்கு உள்ளகுவதாக Livret de développement durable et solidaire இன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 1 ஆம் திகதி இந்த வட்டி அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக அறிய முடிகிறது.
அதேவேளை, உக்ரைன்-இரஷ்யா யுத்தத்தினால் பிரான்சில் பொருட்களின் விலை 4.5% வீதத்தால் சராசரியாக அதிகரித்துள்ளதாக INSEE நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.