நேற்று திங்கட்கிழமை Sartrouville (Yvelines) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.

நேற்று மாலை 5.10 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. rue de Seine வீதியில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக, தீயணைப்புபடையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு 17 வயதுடைய இளைஞன் ஒருவன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான்.

இளைஞன் மீட்க்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

குறித்த இளைஞனை காவல்துறையினர் நன்கு அறிவார்கள் எனவும், அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் எனவும் அதற்காக சிகிச்சை பெற்று வருபவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, துப்பாக்கிச்சூட்டுக்குரிய காரணங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.