முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி - ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில், இம்மானுவல் மக்ரோனுக்கு வாக்களிக்கும் படி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “நான் இரண்டாம் சுற்று தேர்தலின் இம்மானுவல் மக்ரோனுக்கே வாக்களிபேன். ஏனென்றால் முன்னேப்போதும் விட மிக சிக்கலான சர்வதேச நெருக்கடிகளை கையாளும் அனுபவத்தை மக்ரோன் பெற்றுள்ளதாக நான் நம்புகின்றேன்!” என அவர் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை காலை இதனை அவர் தெரிவித்தார்.
வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.
இம்மானுவல் மக்ரோன் மற்றும் மரீன் லு பென் ஆகிய இருவரும் மிகவும் சமமான வாக்கு வீதத்துடன் இருப்பதால், இரு தரப்பினரும் தங்களுக்கான ஆதரவாளர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.