நேற்று வெள்ளிக்கிழமை பிரான்சின் தென்மேற்கு பகுதிகளில் வீசிய Diego புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Saint-Laurent-d'Arce (Gironde) நகரில் வசிக்கும் 56 வயதுடைய ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். மாலை 4 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து அவரது வீட்டின் மீது விழுந்துள்ளது என மீட்ப்புப்பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் கிட்டத்தட்ட 300 இற்கும் அதிகமான அழைப்புக்களை தீயணைப்பு படையினர் பெற்றிருந்ததாகவும், 150 இடங்களில் மீப்புபணியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இன்று காலை நிலவரப்படி 30,000 வீடுகளுக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளதாகவும், மின்சாரத்தை மீள கொண்டுவர திருத்தப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.