10, நாளை ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி தேர்தலின் முதலாம் சுற்று வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது. வாக்குச்சாவடிகள் திறக்கப்படும் நேரம் மற்றும் மூடப்படும் நேரம் ஆகிய விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் காலை 8 மணிக்கு திறக்கப்படும்.
அதேபோல் பெரும்பாலான வாக்குச் சாவடிகள் இரவு ஏழுமணிக்கு மூடப்படும்.
இதில் Paris, Bordeaux, Marseille, Toulouse, Lyon, Nantes மற்றும் Nice உள்ளிட்ட அதிகளவான மக்கள் வசிக்கும் நெருக்கடியான நகரங்களில் மட்டும் இரவு 8 மணி வரைக்கும் வாக்குச்சாவடிகள் திறந்திருக்கும்.
ஆனால் வாக்குச்சாவடிகள் 8 மணிக்குப் பின்னர் கண்டிப்பாக திறக்கப்பட மாட்டாது.
பிரான்சில் 48.7 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அனைத்து கட்சி தலைவர்களும், ஜனாதிபதி வேட்பாளர்களும் பொதுமக்கள் அனைவரையும் வாக்களிக்க அழைத்துள்ளனர்.
இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.