மூன்று மாதங்களுக்கு முன்னர் பரிசில் காணாமல் போன வயலின் ஒன்று, குப்பைத் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் இத்தாலியைச் சேர்ந்த வயலின் இசைக்கலைஞர் ஒருவர் தொடருந்தில் பயணித்துள்ளார். Poitiers நகரில் இருந்து பரிஸ் நோக்கி வந்த அவர், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த €100,000 யூரோக்கள் மதிப்புள்ள வயலின் கருவி ஒன்றையும் எடுத்து வந்திருந்தார். ஆனால் அவர் தொடருந்தில் ஏறிய சில நிமிடங்களிலேயே அவரிடம் இருந்த வயலின் திருடப்பட்டுள்ளது.

அவர் காவல்துறையினரிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். பின்னர் சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பாக பதிவு செய்திருந்தார்.

Champs-Elysées Orchestra இசைக்குழுவைச் சேர்ந்த அவரது வயலின் மூன்று மாதங்கள் கழித்து குப்பைத் தொட்டி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Clignancourt நிலையத்துக்கு அருகே உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் குறித்த வயலின் வீசப்பட்டிருந்ததாகவும், பாதசாரி ஒருவர் அதனை அடையாளம் கண்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் அறிய முடிகிறது.