பிரான்சில் ஜனாதிபதி ஒருவரின் ஆட்சிக்காலத்தை ஏழு ஆண்டுகளாக மாற்ற இம்மானுவல் மக்ரோன் பரிந்துரை செய்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகம் ஒன்றுக்கும் அவர் அளித்த பேட்டியில், இந்த ஏழு ஆண்டுகள் கால ஆட்சிக்காலத்தில் விருப்பம் தெரிவித்தார். ‘ஜனாதிபதி ஒருவரை மதிப்பிட ஐந்து ஆண்டுகள் போதுமானதாக இல்லை!’ என மக்ரோன் பேட்டியின் போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அமெரிக்காவைப் போல இடைக்காலத் தேர்தல் முறைமை ஒன்றை நாம் கொண்டிருக்க வேண்டும். இது தொடர்பாக நாம் தொடர்ச்சியாக பலரது கருத்துக்களை அறிந்துகொள்ள வேண்டி உள்ளது. பிரான்சில் ஜனாதிபதி வகிக்கும் ஐந்து ஆண்டு காலம் என்பது மிகவும் குறுகியதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்!” என மக்ரோன் தெரிவித்தார்.