புறநகர் பரிசில் இடம்பெற்ற குழு மோதல் ஒன்றின் முடிவில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளான்.

செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் Suresnes (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த இந்த நகரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்குக்கும் Rueil-Malmaison நகர இளைஞர்களுக்கும் இடையே இந்த மோதல் வெடித்துள்ளது. 20 பேர் வரை Collège Henri-Sellier கல்லூரிக்கு முன்னால் குவிந்து ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கியுள்ளனர். அவர்கள் கத்தி, கோடரி மற்றும் கோல்ஃப் மட்டைகளை வைத்து தாக்கத்தொடங்கியுள்ளனர்.

5.15 மணிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.

மோதலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை வீசி துரத்தினர். அவர்களில் 7 பேரினை கைதும் செய்தனர்.

இச்சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவனை கத்தியால் குத்தியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் கிடந்த அவனை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.