பரிசில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் மூவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 10 மணி அளவில் பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Gare du Nord நிலையத்துக்கு மிக அருகில், rue du Faubourg-Saint-Denis வீதியில் வைத்து நபர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் தாக்குதலாளி அவரிடம் இருந்து சில பொருட்கள் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். காயமடைந்த குறித்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது சம்பவம் அதிகாலை 2.30 மணி அளவில் Porte Saint-Denis அருகே இடம்பெற்றது. தாக்குதலாளி ஒருவர், வீதியில் சென்ற இருவரை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டு அவர்களிடம் கொள்ளையிட்டுள்ளனர். கத்தி மூலம் தாக்குதல் மேற்கொண்டதில் இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.