ஈஃபிள் கோபுரத்தின் அருகே வைத்து இளம் பெண் மீது பாலியல் தாக்குதல் மேற்கொண்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த இளம் சுற்றுலாப்பயணி ஒருவர் ஈஃபிள் கோபுரத்தின் அருகே நின்றிருந்த போது அவரை ஆண் ஒருவர் நெருங்கியதாகவும், அவருடன் உரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் குறித்த பெண்ணுக்கு, குடிப்பதற்காக வைன் வழங்கியுள்ளார். பின்னர் அவரை நெருங்கி அவர் மீது கைகளை வைத்ததாகவும், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், காவல்துறையினர் அழைக்கப்பட்டதாகவும், அதையடுத்து குறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் அறிய முடிகிறது.
தப்பி ஓடிய நபர் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.