A13 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை Rosny-sur-Seine (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய ஒருவர் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென மகிழுந்து பழுதடைந்து நடு வீதியில் நின்றுள்ளது. மகிழுந்து நின்ற அடுத்து நொடி பின்னால் வேகமாக வந்த மற்றுமொரு மகிழுந்து நின்றிருந்த மகிழுந்துடன் மோதித்தள்ளியது.

இதில் தூக்கி வீசப்பட்ட குறித்த நபர் படுகாயமடைந்து, கொல்லப்பட்டார்.

இரண்டாவது மகிழுந்தில் பயணித்த 29 வயதுடைய நபர் இலேசான காயங்களுக்கு உள்ளானார்.

மேற்படி விபத்து தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.