பாரிஸ் நகரத்திற்குள் வாகனங்கள் நுழைவதற்கு விரைவில் கட்டணம் விதிக்கப்பட உள்ளது.

கார்களுக்கு 5 முதல் 10 யூரோவும், இருசக்கர வாகனங்களுக்கு இரண்டு முதல் ஆறு யூரோவும் கட்டணமாக பெறப்பட உள்ளன.

மின்சார வாகனங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்பட  உள்ளது>

போக்குவரத்து மாசுபாட்டை குறைக்கும் பொருட்டு பாரிஸ் நகர நிர்வாகம் இந்த அறிவிப்பை நேற்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த கட்டண விதி அமலுக்கு வரும்.

இந்த கட்டணம் இடத்திற்கும் நேரத்திற்கும் வாகனத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.

பாரிஸ் நகர மன்ற தலைவரின் இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரிடம் விவாதத்தை எழுப்பியுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் சங்கம் இது நடுத்தர குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

மறுபுறம் சூழலியல் ஆர்வலர்களும் பொது போக்குவரத்தை  பயன்படுத்துபவர்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

பாரிஸ் நகர நிர்வாகம் சுற்றுச்சூழலுக்கு ஏதுவான போக்குவரத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகிறது.

பொது போக்குவரத்து மேம்பாடு, சைக்கிள்களுக்கான தனி வழி, புதிய நடை பாதைகள் போன்றவை இதில் அடங்கும்