Livret A சேமிப்புக் கணக்கின் வட்டி வீதம் இன்று முதல் அதிகரிக்கிறது. 2 வீதத்தில் இருந்து 3 வீதமாக வட்டி அதிகரிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Banque de France வங்கி பரிந்துரை செய்ததை அடுத்து, பொருளாதார அமைச்சர் Bruno le Maire இந்த வட்டி வீத அதிகரிப்பை அறிவித்திருந்தார். அதன்படி, இன்று பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 3 சதவீதமாக வட்டி அதிகரிக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டில் இருந்து 0.5 சதவீதமாக இருந்த வட்டி வீதம், கடந்த வருட ஆரம்பத்தில் 1 வீதமாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் சென்ற ஓகஸ்ட் மாதத்தில் 2 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
ஒவ்வொரு வருடத்திலும் இரு தடவைகள் தானியங்கி முறைப்படி வட்டி வீதம் கணக்கிடப்படும். தற்போது அதிகரித்துள்ள பணவீக்கத்தினை கருத்தில் கொண்டு இந்த வட்டிவீதம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.