பிரான்சில் கொவிட் 19 பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. மீண்டும் முகக்கவசம் அணிவதற்கு பிரதமர் பரிந்துரை செய்துள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்களை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 147,248 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில், 1,289 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 15,496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவில் 105 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 898 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் கொவிட் 19 தொற்றினால் 37 பேர் மரணித்துள்ளனர். இதுவரை பிரான்சில் கொவிட் 19 இனால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 150,000 ஐ நெருங்கியுள்ளது. இவர்களில் மருத்துவமனையில் மட்டும் 120,541 பேர் மரணித்துள்ளனர்.