போலி சுகாதார அட்டைகளை விற்பனை செய்துவந்த நால்வர் கொண்ட குழுவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

400,000 யூரோக்கள் பெறுமதியுள்ள போலி சுகாதார அட்டைகளை தயாரித்து விற்பனை செய்துள்ளனர். ஒவ்வொரு அட்டையினையும் 250 தொடக்கம் 330 யூரோக்கள் வரை விற்பனை செய்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் இவர்கள் 11,000 போலி சுகாதார அட்டைகளை விற்பனை செய்துள்ளனர். இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள்ளும், இணையத்தளமூடாக Rhône மற்றும் Ain பகுதிகளிலும் மேற்பட்டி அட்டைகளை விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வருக்கும் இவ்வாரத்தின் ஆரம்பத்தில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது