பல மில்லியன் பெறுமதியுள்ள போலி நவிகோ அட்டைகளைத் தயாரித்து விற்பனை செய்த நால்வர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

75.20 யூரோக்கள் பெறுமதியுள்ள (முந்தைய விலை) நவிகோ அட்டையை போலியாக தயாரித்து, ஒரு அட்டை 18.80 யூரோக்கள் வீதம் விற்பனை செய்துள்ளனர்.

சமூகவலைத்தளங்களினூடாக இதுபோன்ற நவிகோ அட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் அறிந்த ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத்’ தடுக்கும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் முடிவிலேயே நால்வர் கொண்ட குழுவை அவர்கள் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இதுவரை 65,000 போலி நவிகோ அட்டைகளைத் தயாரித்துள்ளதாகவும், அவற்றில் 45,000 அட்டைகளை விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பல மில்லியன் யூரோக்கள் பெறுமதியான மோசடி இது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் இல் து பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.