குளிர்காலத்தின் போது மின்சாரத் தடை ஏற்படும் அச்சம் தேவையில்லை என அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இக்குளிர் காலத்தில் மின்சார தடை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மின்சார உற்பத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று புதன்கிழமை அரச ஊடக பேச்சாளர் Olivier Véran தெரிவிக்கையில், “மின்சாரத் தடை அவசியமற்று போவதாக தெரிகிறது. எங்களது நான்கு அணுமின் நிலையங்கள் மீள இயங்க ஆரம்பிக்கப்பட்டதால், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யக்கூடியவாறு உள்ளது. “ என Olivier Véran தெரிவித்தார்.

அதேவேளை பிரெஞ்சு மக்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் கடந்த இரு மாதங்களாக மிக சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர். மின் தடையை கடப்பதற்கு இது முக்கியமான காரணியாக அமைகிறது எனவும் ஊடக பேச்சாளர் Olivier Véran தெரிவித்தார்.