நவிகோ மாதாந்த பயண அட்டையை மீள் நிரப்ப முற்பட்ட பலருக்கு, குறிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சைச் சேர்ந்த 100,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவிகோ மீள நிரப்பக்கூடிய இணையத்தளத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த அதிக தொகை வங்கிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு €680 யூரோக்கள் வரை தொகை பெறப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு இரண்டு தடவைகளுக்கு மேல் பணம் பெறப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

மேற்படி சம்பவங்களை உடனடியாக இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து நிறுவனமான Île-de-France Mobilités, மேற்படி பிரச்சனையை சரி செய்துள்ளது.

அதேவேளை, அதன் தலைவரான Valérie Pécresse மேற்படி அசம்பாவிதத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளதுடன், மேலதிகமாக பெறப்பட்ட பணம் திருப்பியளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.