பரிசின் புறநகர் பகுதி ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்ட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.




மூவர் கொண்ட குழு ஒன்று கடந்த சனிக்கிழமை Élancourt (Yevlines) நகரில் இக்கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் இருவரை சுற்றி வளைத்த குறித்த மூவர் கொண்ட குழு, அவர்களை மிரட்டி கத்தி மூலம் அச்சுறுத்தல் விடுத்து அவர்களிடம் இருந்து சில பொருட்களை கொள்ளையிட்டனர். பணம், தொலைபேசிகள் மற்றும் சிகரெட் போன்ற பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

பின்னர் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதன் பின்னர், காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் சில நிமிடங்களிலேயே குறித்த கொள்ளையர்களைக் கைது செய்தனர்.