ஜெர்மனியில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட ஐவர் கொண்ட குழு ஒன்றை பிரான்சின் Saint-Denis நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிரெஞ்சு எல்லை நகரம் ஒன்றில் பணம் எடுத்துச் செல்லும் கவச வாகனம் ஒன்றை சுற்றிவளைத்த கொள்ளையர்கள் சிலர், கவச வாகனத்தில் இருந்து பணத்தினை கொள்ளையிட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

பின்னர் கொள்ளையர்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், கொள்ளையர்கள் தப்பிச் சென்று பிரான்சுக்குள் நுழைந்ததாகவும் அவர்கள் தேடப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை பிரான்சின் 93 ஆம் மாவட்டத்தின் Saint-Denis நகரில் வைத்து ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர். சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக அறிய முடிகிறது.