உடல்நலத்துக்குத் தீங்கான போதைப்பொருள் ஒன்று சிறுவர்களிடையே பரவி வருவதாக பரிஸ் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
nitrous oxide எனப்படும் வாயு தற்போது அதிகளவில் உட்கொள்ளப்படும் பொருளாக மாறி வருகிறது. மன அழுத்தத்தைப் போக்கும், அமைதியை உண்டாக்கும் என்று விளம்பரப்படுத்தப்படும் இந்த nitrous oxide, தற்போது சிறுவர்களிடையே மோகப்பொருளாக மாறியுள்ளது.
குறித்த nitrous oxide வாயு உடல்நலத்துத்துக்கு தீங்கானது எனவும், அடிமைத் தனத்தை ஏற்படுத்தக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரைவில் இந்த nitrous oxide வாயுக் குடுவைகள் சிறுவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி nitrous oxide வாயு தொடர்பாக பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்கும்படி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.