எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்தும் படி அரசாஙம் பொது மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளதை அடுத்து, கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்து பிரெஞ்சு மக்களின் எரிவாயு பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஓகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை 10.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.4 சதவீத வீழ்ச்சியாகும்.
இரஷ்ய-உக்ரேன் யுத்தம் காரணமாக பிரான்சுக்கு தேவையான எரிவாயுவினை பெறுவதில் பெரும் சிக்கல்கள் நிலவி வருகிறது. இக்குளிர் காலத்தின் போது எரிவாயு தட்டுப்பாட்டினால் மக்கள் குளிரில் உறையக்கூடும் என எச்சரிக்கப்பட்டு, எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த அரசு கோரிக்கை வைத்துள்ளது.
அதையடுத்தே இந்த எரிவாயு பாவனை வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னதாக, பிரெஞ்சு மக்கள் மின்சாரத்தினை பயன்படுத்தும் வீதமும் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.