தொடருந்து தொழிலாளர்கள் நாளை சனிக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், தொடருந்து சேவைகள் சில பாதிப்புக்கு உள்ளாகின்றன.
நெடுந்தூர தொடருந்துகளான TGV சேவைகளே பாதிப்புக்கு உள்ளாகின்றன. 650 சேவைகளில் 20 சேவைகள் நாளைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக SNCF அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு நோக்கிச் செல்லும் TGV Atlantique சேவைகளே இந்த தடையைச் சந்திக்கின்றன.
TER மற்றும் Transilien சேவைகள் மிகச்சிறிய அளவில் பாதிக்கப்பட உள்ளன.
SNCF தரப்பில் தெரிவிக்கையில், “பயணிகள் வீட்டில் இருந்து புறப்படும் முன்னர் முன்பதிவு செய்த தொடருந்து சேவைகள் குறித்த விபரங்களை பெற்றுக்கொண்டு செல்லவும்!” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிரிஸ்மஸ் விடுமுறை ஆரம்பிக்க உள்ள நிலையில், தொடருந்து சேவைகள் பாதிக்கப்படுவது பயணிகளை பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.