வீடுகளுக்குள் நுழைந்து தொடர் திருட்டுக்களில் ஈடுபட்ட திருடன் ஒருவனை Cergy நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
rue des Chênes வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் அருகே காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள கட்டிடம் ஒன்றின் நான்காவது தளத்தில் நபர் ஒருவர் மரப்பெட்டி ஒன்றை சுமந்துகொண்டு வருவதை பார்த்துள்ளனர்.
குறித்த நபர் மீது சந்தேகம் எழ, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த நபர் காவல்துறையினரை பார்த்ததும் பெட்டியை கைவிட்டு தலைமறைவாகியுள்ளார். குறித்த பெட்டி அங்குள்ள வீடொன்றில் திருடப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் திருடனும் தேடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளான். அண்மைய நாட்களில் அப்பகுதியில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதை அடுத்தே காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் மொத்தமாக 14 இடங்களில் திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.