தலைநகர் பரிசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்படுவது தொடர்பில் நகரசபை ஆலோசித்து வருகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தடையினை விதிக்க நகரசபை ஆலோசித்து வருவதாகவும், பரிசில் மின்சார ஸ்கூட்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களின் ‘அனுமதி’யை இரத்துச் செய்யவும் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது.
குறிப்பாக Lime, Dott மற்றும் Tier ஆகிய மூன்று நிறுவனங்களையும் (பரிசில் மின்சார ஸ்கூட்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள்) நிரந்தரமாக இரத்துச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் 15,000 ஸ்கூட்டர்கள் பாவனையற்றுப்போகும் எனவும் அறிய முடிகிறது.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து இந்த தடை விதிக்கப்படலாம் என அறிய முடிகிறது. இது தொடர்பாக பரிஸ் நகரசபையில் முதல்வர் ஆன் இதால்கோ தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிரான்சில் மின்சார ஸ்கூட்டர் விபத்தினால் 24 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது