பிரான்சில் அகதிகள் வரவேற்படு தொடர்பில் அரசு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என அதிகளவான பிரெஞ்சு மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட பத்தில் 7 பேர் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அகதிகளை நாட்டுக்குள் வரவேற்படு தொடர்பில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டுமா என கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பியபோது, 67 சதவீதமான மக்கள் ‘ஆம்’ என பதிலளித்துள்ளனர்.
CSA எனும் கருத்துக்கணிப்பு நிறுவனம் பிரெஞ்சு ஊடகம் ஒன்றுக்காக மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது.
அண்மையில், இத்தாலியால் நிராகரிக்கப்பட்ட 234 அகதிகள் கொண்ட கப்பலை பிரான்சுக்குள் நுழைய பிரான்ஸ் அனுமதித்திருந்தது. இச்சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதை அடுத்தே மேற்படி கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.