வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன்.
Fontenay-le-Fleury (Yvelines) நகரில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சிகரெட் விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டுவருக் ஒருவர் ஆயுத முனையில் கடத்தப்பட்டுள்ளார். பின்னர் அவரது விற்பனை நிலையத்தில் உள்ள பெட்டகத்தில் இருந்து €50,000 யூரோக்கள் பணம் சூறையாடப்பட்டுள்ளது. அத்தோடு அவரது வீட்டில் இருந்து €100,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வர்த்தகர் முகத்தில் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கொள்ளையர்கள் அவரை விட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட போது, மேற்படி கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வர்த்தகரின் உறவினர் என தெரியவந்துள்ளது. விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.