இல் து பிரான்சுக்குள் இவ்வார இறுதியில் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வரும் சனிக்கிழமை அதிகாலையில் 0°C குளிர் நிலவும் எனவும், அன்றைய காலையில் இவ்வருடத்துக்கான முதலாவது பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் Météo-France அறிவித்துள்ளது. பரிசின் ஒரு சில பகுதிகளில் -1°C குளிர் நிலவும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இல் து பிரான்சின் கிழக்கு பகுதிகளில் 2°C வரையான குளிரும், மழையுடன் கூடிய பனிப்பொழிவும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் இதுபோன்ற குளிரே நிலவும் எனவும், ஓரிரு இடங்களில் பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.