தலைநகர் பரிசில் உள்ள வீதிகளில் புதிய வேகக்கட்டுப்பாடு கொண்டுவரும் கோரிக்கையினை நிர்வாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பரிசில் உள்ள வீதிகளின் அதிகபட்ச வேகத்தினை மணிக்கு 30 கி. மீ ஆக மட்டுப்படுத்தும் கோரிக்கை ஒன்றை பரிஸ் நகரசபை மற்றும் பரிஸ் காவல்துறையினர் முன் வைத்தனர். இது தொடர்பாக ஆராய்ந்த பரிஸ் நிர்வாக நீதிமன்றம், மேற்படி கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

‘மேற்படி வேகக்குறைப்பானது ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதனால் விளையும் நன்மைகள் குறித்து விபரிக்கப்பட்ட தரவுகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது’ என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வேகக்குறைப்பு தொடர்பாக மிக நீண்டகாலமாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது. மேற்படி கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக பரிசில் இயங்கும் வாடகை மகிழுந்து சேவையான VTC சாரதிகள் மேற்படி வேகக்கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.