உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பகல் 2 மணி அளவில் Alpes-Maritimes இல் இடம்பெற்றுள்ளது. உலங்குவானூர்தி ஒன்று மூவருடன் பயணித்த நிலையில், Èze மற்றும் Villefranche பகுதிகளுக்கிடையே தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்தில், உலங்குவானூர்தியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.