உக்ரேனின் தென்கிழக்கு நகரமான Zaporizhzhia அணுமின் நிலையம் மீது இரஷ்யா ஏவுகணைத்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து, சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் (l'Agence internationale de l'énergie atomique) தலைவருடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உரையாடியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொலைபேசியூடாக இந்த உரையாடல் இடம்பெற்றது. l'Agence internationale de l'énergie atomique இன் தலைவர் Rafael Grossi இனை தொடர்புகொண்ட ஜனாதிபதி மக்ரோன் அங்கு நிலமைகளை கேட்டறிந்துகொண்டார்.

Zaporizhzhia அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து மொஸ்கோ மீது உக்ரேன் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது. மேற்படி தாக்குதலை அடுத்து சர்வதேச நாடுகள் இரஷ்யா மீது கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகிறது.

அதையடுத்து, இன்னும் சில நிமிடங்களில் உக்ரேன் ஜனாதிபதியுடன் மக்ரோன் உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது