வங்கி உள்ளிட்ட பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஐவர் கொண்ட குழு ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில் Île-de-France மாகாணத்தில் பல கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். Versailles (Yvelines) நகரை தலைமையிடமாக கொண்டு செயற்பட்டு வந்த குறித்த ஐவர் கொண்ட குழுவை, இவ்வார ஆரம்பத்தில் Montataire (Oise) நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்கள் அங்குள்ள சந்தை ஒன்றில் கொள்ளையில் ஈடுபட்டு, திரும்பிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகவும், கைதான அனைவரும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்ளையர்கள் சமீபத்தில் Société Générale வங்கி ஒன்றிலுல் கொள்ளையிட்டிருந்தனர். வங்கியின் கூரையை உடைத்து, பாதுகாப்பு பெட்டகத்தை எரித்து உள்ளிருந்து €50,000 யூரோக்கள் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.