Ocean Viking கப்பலில் வந்திறங்கிய அகதிகளில் 44 பேர் அவர்களது நாட்டுக்கு திரும்பி அனுப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
மனிதநேய கப்பல் ஒன்று அகதிகளை ஏற்றிய நிலையில் கடந்தவாரம் பிரான்சின் Toulon கடற்கரையை வந்தடைந்தது. நீண்ட நாட்கள் கடலில் சுற்றியலைந்த குறித்த கப்பல், இறுதியாக பிரான்சை வந்தடைந்தது. அதில் இருந்த 234 அகதிகளும் இறக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்கும், புகலிட தஞ்சக்கோரிக்கைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 44 பேர் திருப்பி அனுப்பப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்.
பிரான்சில் புகலிட கோரிக்கைக்கு ஏற்புடையவர்களாக 60 அகதிகள் உள்ளதாகவும், அவர்களது புகலிட கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். சிரியா, சூடான், எரித்தேரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கே இந்த புகலிடக்கோரிக்கைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.