பிரான்சின் தென்கிழக்கு பிராந்தியமான Avignon (Vaucluse) நகரில் நேற்று புதன்கிழமை இரவு துப்பாகிச்சூடு ஒன்று இடம்பெற்றது.
அங்குள்ள சந்தைத் தொகுதி ஒன்றுக்கு இரவு 11 மணி அளவில் ஆடம்பர சொகுசு மகிழுந்தில் வருகை தந்ததாக குறிப்பிடப்படும் முகமூடி அணிந்த ஆயுத தாரிகள் சிலர், அங்கு நின்றிருந்த சிலரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இச்சம்பவத்தில், 18 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். பின்னர் ஆயுதாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், ஆயுததாரிகள் பயன்படுத்திய மகிழுந்தினை எரியூட்டப்பட்ட நிலையில் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடையதாக மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்