நேற்று ஹாலோவீன் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, நாடு முழுவதும் பரவலாக பலத்த வன்முறைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 நகரங்களில் வன்முறைகள் இடம்பெற்றதாக தேசிய காவல்துறையினர் தெரிவித்தனர். மொத்தமாக 88 வாகனங்கள் திக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறைகளுக்கு எதிராக போராடிய காவல்துறையினரின் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் மொத்தமாக 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் பரிசில் 31 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தீவைப்பு, சேதம் விளைவிப்பு, காவல்துறையினர் மீது தாக்குதல் என பலத்த வன்முறையான இரவாக அமைந்திருந்தது. கைது செய்யப்பட்டவர்களில் 36 பேர் பரிசில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.