பிரான்சில் கடந்த இரண்டாவது வாரமாக எரிபொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
டீசல் ஒரு லிட்டரின் விலை 3.8 சதங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. டீசல் ஒரு லிட்டரின் புதிய விலை 1.8678 யூரோக்களாகும்.
அதேவேளை, பெற்றோல் ஒரு லிட்டரின் விலை 2.7 சதங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளது. SP95-E10 பெற்றோல் ஒரு லிட்டரின் புதிய விலை 1.6048 யூரோக்களாகும்.
SP95 பெற்றோல் 1.6726 யூரோக்களுக்கும், SP98 ஒரு லிட்டர் 1.7044 யூரோக்களுக்கும் விற்பனையாகிறது.
மேற்படி தகவலை Ministere de la Transition Energetique அலுவலகம் வெளியிட்டுள்ளது. மிக குறைந்த அளவான தொகையே வீழ்ச்சியடைந்துள்ளபோதும், தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக விலை வீழ்ச்சியடைகிறமை குறிப்பிடத்தக்கது.