இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இல் து பிரான்சுக்குள் 1.25 மில்லியன் பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 22% வீதமானோர் வெளிநாட்டவர்களாவர். கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இவர்கள் பிரதானமாக, உணவகம் மற்றும் உணவகம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுகின்றனர். அதையடுத்து, வீட்டு உதவியாளர்கள், வீட்டு பணியாளர்கள், கட்டிட தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் திறன் அடிப்படையிலான பொது பணிகளில் ஈடுபடுகின்றனர்.
வெளிநாட்டு பணியாளர்களில் 38 சதவீதமானவர்கள் பிரெஞ்சு குடியுரிமை கொண்டுள்ளார்கள் எனவும், ஏனையவர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், சட்டவிரோதமாகவும் பணிபுரிகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெளிநாட்டவர்களில் 27 சதவீதமானவர்கள் மக்ரெப் நாடுகளைச் (அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் துனிசியா) சேர்ந்தவர்கள் எனவும், 18 சதவீதமானவர்கள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*மேற்படி ஆய்வினை, INSEE நிறுவனம் மெற்கொண்டுள்ளது.