கடந்த ஒக்டோபர் மாதத்தில் பிரான்சில் 295 பேர் வீதி விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு அலுவலகம் (Sécurité routière) தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் 298 பேர் பலியாகியிருந்த நிலையில், மிகச்சிறிய அளவில் இம்மாதம் வீதி விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
இவ்வருட ஒக்டோபர் மாதத்தில் 4,720 வீதி விபத்து இடம்பெற்றுள்ளது. சென்ற வருட ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 868 விபத்துக்கள் குறைவாகும்.
அதேவேளை, கடல் கடந்த மாவட்டங்களில் (Overseas Territories) 33 பேர் பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.