2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் (JO) பரிசில் இடம்பெற உள்ள நிலையில், அதன் ஆரம்ப நிகழ்வுகள் Place de la Concorde பகுதியில் இடம்பெற உள்ளது.
இன்று வியாழக்கிழமை இத்தகவலை ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. மிக பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் இந்த நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 35,000 பார்வையாளர்கள் அமர்ந்து இந்த நிகழ்வினை பாரவையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிகழ்வுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் 8 ஆம் திகதி வரை இடம்பெறும். இறுதி நாள் நிகழ்வு Stade de France மைதானத்தில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது