TotalEnergies பெற்றோலிய நிறுவனத்தின் ஊழியர்கள் வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேற்படி நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளில் (raffinerie) ஒன்றான Gonfreville-L'Orcher (Seine-Maritime) ஆலையில் பணிபுரியும் ஊழியர்களே இந்த ‘நீண்ட’ நாட்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

10 சதவீத ஊதிய உயர்வினை விடாப்பிடியாக கோரிவரும் மேற்படி தொழிற்சங்க ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை TotalEnergies நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு ஆலைகள் ’ஊழியர்களின் வேலை நிறுத்தத்தம்’ காரணமாக மூடப்பட்டுள்ளது. அதன் விளைவாக பிரான்சில் நான்கில் ஒரு (25 சதவீத) எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.