மலையில் இருந்து செல்ஃபி எடுக்க முற்பட்ட பெண் ஒருவர் கடலுக்குள் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் falaised'Étretat (Seine-Maritime) பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கடலும் மலையும் இணையும் இங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மலையில் உச்சியில் இருந்து செல்ஃபி புகைப்படம் எடுக்க முற்பட்டுள்ளார். அதன் போது மனைவி அங்கிருந்து தவறி விழுந்துள்ளார்.

உதவிக்குழு அழைக்கப்பட்டனர். கடலில் தீவிர தேடுதல் வேட்டை இடம்பெற்றது. ஆனால் அவரது சடலம் இதுவரை (திங்கட்கிழமை மாலை நிலவரம்) கண்டுபிடிக்கப்படவில்லை.

அப்பெண்ணின் கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.